Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைக‌ள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2009 (11:19 IST)
‌ பிற‌வி‌யிலேயே இரு கைகளையும் இழந்த மாணவி, காலால் ப‌த்தா‌ம் வகு‌ப்பு‌ பொது‌த ் தேர்வு எழுதினார்.

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகள் வித்யஸ்ரீ.

இவர் பிறக்கும் போதே 2 கைகளும் இல்லாத நிலையில் பிறந்தார். ஆனாலும் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் சிறுமியாக இருக்கும்போதே இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுதுவதற்கு பயிற்சி பெற்றார். பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப‌த்தா‌ம் வகு‌ப்பு படித்து வந்தார்.

நே‌ற்று தமிழ்நாடு முழுவதும் ப‌‌த்தா‌ம் வகு‌ப்பு‌ப் பொது‌த் தே‌ர்வ ு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

முக ைய ூர் செயின்ட் சேவியர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், வித்யஸ்ரீ பரீட்சை எழுதினார். தனது இடது காலின் விரல்களுக்கிடையே பேனாவை வைத்து, காலால் வினாக்களுக்கான விடையை எழுதினார்.

மற்ற மாணவிகளை காட்டிலும், மாணவி வித்யஸ்ரீக்கு மட்டும், தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 1.45 மணி வரை அனுமதித்தார்கள்.

குழ‌ந்தைகளே கைக‌ள் இ‌ல்லாத ‌வி‌த்யாஸ்ரீ படி‌த்து காலா‌ல் தே‌ர்வு எழுது‌கிறா‌ர். அவரு‌க்கு நமது பாரா‌ட்டு‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்ளுவோ‌ம்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments