Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு ‌தின‌ம் : ‌நீரா‌வி எ‌ஞ்‌ஜி‌ன் ர‌யி‌ல்

Webdunia
செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:26 IST)
குடியரசு ‌தின‌த்தை மு‌ன்‌னி‌ட்டு ராயபுர‌ம் - ரா‌ம்பர‌ம் இடையே ‌நீரா‌வி எ‌ஞ்‌ஜி‌ன் ர‌யி‌ல் இய‌க்க‌ப்பட உ‌ள்ளது.

இது கு‌றி‌த்து தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல், இ‌ந்‌திய ர‌யி‌ல்வே‌யி‌ல் முத‌ன் முதலாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே ம‌ண்டல‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டு, 9,654 ‌கி.‌மீ. தூர‌த்து‌க்கு ர‌யிலக‌ள் இய‌க்க‌ப்ப‌ட்டன.

செ‌ன்னை, செ‌ன்‌ட்ர‌‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌ம் மெ‌ட்ரா‌ஸ் ர‌யி‌‌‌ல்வே க‌ம்பெ‌னி மூல‌ம் 1873ஆ‌ம் ஆ‌‌ண்டு ஏ‌ப்ர‌ல் மாத‌ம் ‌திற‌க்க‌ப்ப‌ட்டது. எழு‌ம்பூ‌ர் ‌ர‌யி‌ல் ‌நிலைய‌ம் 1908 ஜூ‌ன் மாத‌ம் ‌திற‌க்க‌ப்ப‌ட்டது.

மெ‌ட்ரா‌ஸ் ர‌யி‌ல்வே க‌ம்பெ‌னி, முத‌ன் முதலாக ‌நீரா‌வி எ‌ஞ்‌ஜி‌ன் ர‌யிலை இய‌க்‌கியது. அத‌ற்கு‌ பிறகுதா‌ன் டீச‌ல் ம‌ற்று‌ம் ‌மி‌ன்சார‌த்‌தினா‌ல் இய‌ங்கு‌ம் எ‌ஞ்‌ஜி‌‌ன்களை கொ‌ண்ட ர‌யி‌ல்க‌ள் இய‌க்க‌ப்ப‌ட்டன.

இதுபோ‌ன்ற ரர‌யி‌ல் சேவை வரலா‌ற்றை மாணவ‌ர்க‌ள் அ‌றி‌ந்து கொ‌ள்ள குடியரசு ‌தின‌த்த‌ன்று, ராயபுர‌த்‌தி‌ல் இரு‌ந்து தா‌ம்பர‌ம் வரை ‌நீரா‌வி எ‌ஞ்‌ஜி‌ன் ர‌யி‌ல் இய‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்த ர‌யி‌ல் காலை 11 ம‌ணி‌க்கு ராயபுர‌த்‌தி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு கட‌ற்கரை, எழு‌ம்பூ‌ர், மா‌ம்பல‌ம், ‌‌கி‌ண்டி வ‌‌ழியாக தா‌ம்பர‌ம் செ‌ன்றடையு‌ம்.

ஆ‌ங்கா‌ங்கே ‌உ‌ள்ள ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ர‌யிலை பொதும‌க்க‌ள் பா‌ர்‌க்கலா‌ம். ‌‌3 பெ‌ட்டிக‌ள் கொ‌ண்ட இ‌ந்த ர‌யி‌லில‌் மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் ம‌ற்று‌ம் மனநல‌ம் கு‌ன்‌‌றிய மாணவ, மாண‌விக‌ள் பயண‌ம் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments