Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகிலேயே இது கொஞ்சம் பெரியது

Webdunia
புதன், 29 ஜூலை 2009 (15:48 IST)
உல‌க‌த்‌திலேயே ‌‌மிக‌ப் பெ‌ரிய ‌விஷயமு‌ம், ‌சிற‌ந்த ‌விஷய‌ங்களு‌ம் ‌சிற‌ப்பான இட‌த்தை பெறு‌ம். அதுபோ‌ல் உ‌ங்க‌ள் முய‌ற்‌சியு‌ம் ஒரு சாதனை‌ப் ப‌ட்டிய‌லி‌ல் இட‌ம்பெற வே‌ண்டு‌ம்.

உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.

உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.

உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments