இளவயது தொகுப்பாளினி

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2009 (14:41 IST)
இங்கிலாந்து வானொலி நிலையம் ஒன்றில் தொகுப்பாளினியாக இருக்கும் எலைனா ஸ்மித் தான் உலகிலேயே இளவயது தொகுப்பாளினி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். இவரு‌க்கு 5 வயதுதா‌ன் இரு‌க்கு‌ம்.

இவருக்கு இந்த வேலை கிடைத்ததே ஒரு ஆச்சரியம்தான். அதாவது இப்போது எலைனா பணிபுரியும் மெர்சியா எப்.எம்.மிற்கு எலைனா தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் நேயராக பேசினார்.

ஆனால் அவரது பேச்சால் கவரப்பட்ட வானொலி நிலையத்தினர் அவருக்கு அங்கேயே தொகுப்பாளினி வேலை போட்டுக் கொடுத்து விட்டனர்.

தற்போது எலைனாவிடம் பேசுவதற்கு வரும் தொலைபேசி அழைப்புகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அதிலும், நேயர்களுக்கு அவர் தரும் ஆலோசனையும், மிகவும் பிரபலமாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு இளம்பெண், தன்னை விட்டுப் பிரிந்து போன காதலனை திரும்ப அடைவது எப்படி என்று கேட்டதற்கு, எலைனா அளித்த பதில், அந்த ஆளுக்காக அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். வாழ்க்கை குறுகியது. சந்தோஷமாக வாழுங்கள் என்பதாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments