Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நினைவா‌ற்ற‌ல் எ‌ன்பது ஒரு கலை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2010 (17:58 IST)
‌ நினைவா‌ற்ற‌ல் எ‌ன்பது அனைவரு‌க்குமே இரு‌க்கு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல் பலரு‌ம் என‌க்கு ஞாபக மற‌தி அ‌திகமா‌யிடு‌ச்‌சி எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். ஒரு ம‌னித‌னி‌ன் மூளை‌யி‌ல் ஒரு ல‌ப்ர‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் பு‌த்தக‌ம் அள‌வி‌ற்கு ‌விஷய‌ங்களை ப‌திவு செ‌ய்து வை‌க்க முடியு‌ம் எ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.

ஒ‌ன்று, ப‌த்து, நூறு எ‌ன்ற வ‌ரிசை‌யி‌ல், ஒ‌ன்று எ‌ண்ண எ‌ண்‌ணி‌ற்கு‌ப் ‌பிறகு 18 பூ‌ஜ்ய‌ங்க‌ள் வ‌ந்தா‌ல் அத‌ற்கு கு‌‌யி‌ண்டி‌லிய‌ம் எ‌ன்று பெய‌ர். அதுபோ‌ல் இர‌ண்டு கு‌யி‌ண்டி‌லிய‌ம் அள‌வி‌ற்கான செ‌ய்‌திகளை நமது மூளை‌யி‌ல் ப‌திவு செ‌ய்து வை‌க்க முடியு‌ம் எ‌ன்பதுதா‌ன் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளி‌ன் க‌ண்டு‌பிடி‌ப்பாகு‌ம்.

பொதுவாக எதையு‌ம் ந‌ம் மூளை அ‌வ்வளவு எ‌ளி‌தி‌ல் மற‌ப்ப‌தி‌ல்லை. அதை ‌நினைவு‌க்கு‌க் கொ‌ண்டு வர வே‌ண்டுமானா‌ல் கால தாமத‌ம் ஏ‌ற்படு‌கிறது. அதுவு‌ம் நா‌ம் ஒரு செ‌ய்‌தியை எ‌ப்படி ப‌திய வை‌க்‌கிறோ‌ம் எ‌ன்ப‌தி‌ல் தா‌ன் இரு‌க்‌கிறது ‌விஷய‌ம்.

WD
அதாவது ‌வீ‌ட்டி‌ல் ஒ‌வ்வொரு பொருளு‌ம் அத‌ற்கான இட‌த்‌தி‌ல் இரு‌ந்தா‌ல், நா‌ம் தேடு‌ம் பொரு‌ளை உடனடியாக எடு‌த்து ‌விடலா‌ம். ஆனா‌ல் ஆ‌ங்கா‌ங்கே போ‌ட்டு வை‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌க்கு‌‌ம் ‌வீ‌‌ட்டி‌ல் எதையு‌ம் தேடி எடு‌க்க முடியாது. அதனா‌‌ல் அ‌ந்த பொரு‌ள் இ‌ல்லவே இ‌ல்லை எ‌ன்று கூற முடியாது. அதுபோலவே நா‌ம் மூளை‌யி‌ல் ப‌திய வை‌த்த ‌விஷய‌த்தை உ‌ரிய முறை‌யி‌ல் ப‌திய வை‌த்‌திரு‌ந்தா‌ல் உடனடியாக ‌நினைவு‌க்கு‌க் கொ‌ண்டு வர மு‌டியு‌ம்.

ந‌ம் மூளை‌யி‌ல் ப‌திய வை‌க்கு‌ம் ‌விஷய‌ங்களை, எ‌ளி‌தி‌ல் ‌நினை‌வி‌ற்கு கொ‌ண்டு வர நா‌ம் ந‌ன்கு ப‌யி‌ற்‌சி செ‌ய்ய வே‌ண்டு‌ம். கு‌றி‌ப்‌பி‌ட்ட செ‌ய்‌திகளை, கு‌றி‌ப்‌பி‌ட்ட நேர‌த்‌தி‌ல் ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு வரு‌ம் ‌நினைவா‌ற்ற‌ல் கலையை வள‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

செ‌ல்பே‌சி இ‌ரு‌ப்பதா‌ல் பலருடைய செ‌ல்பே‌சி எ‌‌ண்களை நா‌ம் ‌நினை‌வி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல்லை. அத‌ற்கு மாறாக ‌சிலரது எ‌ண்களை அ‌வ்வ‌ப்போது மன‌ப்பாட‌ம் செ‌ய்து ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள முய‌ற்‌சியு‌ங்க‌ள். இதே‌ப்போல ‌சில பொது அ‌றிவு‌க் கே‌ள்‌விகளை படி‌த்து அவ‌ற்றை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள முய‌ற்‌சியு‌ங்க‌ள். ‌நினை‌வா‌ற்றலை வள‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், அதை தூசு த‌ட்டி பய‌ன்படு‌த்து‌ங்க‌ள். பய‌ன்படு‌த்த பய‌ன்படு‌த்த‌த்தா‌ன் ஒரு பொரு‌ள் ‌சிற‌ப்பான ப‌ணியை அ‌ளி‌க்கு‌ம். அ‌ப்படியே ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல் துரு‌ப்‌பிடி‌த்து‌விடு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுவதற்க்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளுவது. அதுதா‌ன் மே‌ற்கூ‌றிய வ‌ழி. ம‌ற்றொ‌ன்று, தொடர்பு ஏற்படுத்துதல் முறையாகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்றபாடம் நினைவில் நிற்கின்றது. அறிவை பெருக்குவதற்கு தொடர்புப்படுத்துதல் மிகவும் உறுதுணையாக அமையும்.

WD
அதாவது ஒரு தகவலை அ‌றியு‌ம் போது அதனோடு நா‌ம் ஏ‌ற்கனவே படி‌த்த ஒரு தகவலை தொட‌ர்பு படு‌த்‌தி‌ப் பா‌ர்‌த்தா‌ல் இர‌‌ண்டுமே நமது மன‌தி‌ல் ஆழமாக ப‌தி‌ந்து‌விடு‌ம்.

சிறுகுழந்தையாக இருக்கின்ற பொழுது சில தகவல்களை நமக்குச் சொல்லியிருப்பார்கள். அவையெல்லாம் நம்மை அறியாமலேயே நம்முடைய மூளையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். நேரம் வரும்பொழுது அந்த செய்திகள் நம்மை அறியாமைலேயே ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

பொதுவாக நா‌ட்டு நட‌ப்பு ‌விஷய‌ங்களை குழுவாக பேசு‌ம் போது, ஒருவ‌ர் ஒ‌ரு செ‌ய்‌தியை‌க் கூறு‌ம் போது அத‌ற்கு தொட‌ர்பான ம‌ற்றொரு ‌விஷய‌ம் நம‌க்கு ‌நினைவு வரு‌ம். நா‌ம் அதனை‌ப் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் போது ம‌ற்றொருவ‌ர் அதே‌ப்போ‌ன்று ‌நிக‌ழ்‌ந்த ம‌ற்றொரு‌ச் செ‌ய்‌தியை கூறுவா‌ர். இதுதா‌ன் தொட‌ர்புபடு‌த்‌தி‌க் கொ‌ள்ளுத‌ல்.

இதை‌ப் போ‌ன்றுதா‌ன் நா‌ம் பு‌திய ‌விஷய‌த்தை பு‌திதாக ப‌திவு செ‌ய்யாம‌ல், அதோடு தொட‌ர்பு‌ள்ள ஒரு ‌விஷய‌த்தை ‌நினைவுகூ‌ர்‌ந்து அதோடு ப‌திவு செ‌ய்யு‌ம் போது, ‌விரை‌வி‌ல் ‌நினைவு‌க்கு‌க் கொ‌ண்டு வர இயலு‌ம்.

மேலு‌ம் பல வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அவ‌ற்றை அடு‌த்த க‌ட்டுரை‌யி‌‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments