Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேரத்தை ஆக்கிரமிக்கும் தொலைக்காட்சி

நேரத்தை ஆக்கிரமிக்கும் தொலைக்காட்சி
, செவ்வாய், 24 ஜூன் 2008 (11:17 IST)
முன்பெல்லாம் ஓடி விளையாடுவதும், அக்கம் பக்கம் குழந்தைகளுடன் சேர்ந்து கூடி விளையாடுவதும் குழந்தைகளின் பொழுதுபோக்காக இருந்தது.

தற்போது நான்கு சுவற்றுக்குள் தொலைக்காட்சி பார்ப்பதை குழந்தைகள் பொழுதுபோக்காகிக் கொண்டுள்ளனர்.

அப்படியே தொலைக்காட்சி வெறுத்துவிட்டாலும் கணினி விளையாட்டுக்கு மாறி விடுகிறார்கள்.

2 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு வாரத்தில் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் கணக்கிட்டால் சுமார் 24 மணி நேரங்கள் அதாவது ஒரு நாள் அளவிற்கு தொலைக்காட்சி பார்த்திருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குழந்தைகளில் பெரும்பாலானோர் இந்த விதிமுறைக்கு உள் வருகிறார்கள் என்கிறது ஆய்வு அறிக்கை.

வீட்டில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளின் முக்கியப் பொழுது போக்காக தொலைக்காட்சி மாறிவிடுகிறது.

குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இருக்கும்போதும் தொலைக்காட்சி பார்ப்பது என்பது இயல்பானதாகிவிட்டது.

இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் தினமும் 7 மணி நேரம் தொலைக்காட்சி இயக்கப்படுகிறது.

இது குழந்தைகளின் பார்வைத் திறன், விளையாட்டுத் திறன் போன்றவற்றை குறைத்து விடுவதுடன், சில குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீணிகளை உண்பதால் உடல் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகிறது.

இதனைத் தவிர்க்க பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகள் எந்த விதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்றும், எத்தனை மணி நேரம் பார்க்கிறார்கள் என்றும் கவனித்து அதனை சீர்படுத்த வேண்டும்.

எதையாவது செய்து கொள்ளட்டும், நம்மை தொல்லை செய்யாமல் இருந்தால் போதும் என்று எண்ணி அவர்களை அவர்கள் போக்கில் விடுவது பெறும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

அவர்களுக்கு ஒரு நாளில் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும், விளையாட வேண்டும், தொலைக்காட்சி பார்க்க வேண்டும், வேலை செய்ய வேண்டும் என்பது பற்றி எழுதப்படாத ஒரு அட்டவணையை வகுத்துக் கொடுத்துவிட வேண்டும்.

அவர்கள் அதனை பின்பற்ற நீங்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களை சொல்லிவிட்டு பெற்றோர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது தவறு. அவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களிடம் உள்ள மற்ற திறமைகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

சாப்பிடும் நேரத்தையோ, தூங்கும் நேரத்தையோ, படிக்கும் நேரத்தையோ தொலைக்காட்சி பார்ப்பது பாதிக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருங்கள்.

கண்களில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். தொலைக்காட்சி பார்க்கும்போது கண்களில் தண்ணீர் வடிந்தால் அதற்கும் உரிய சிகிச்சை எடுங்கள். தொலைக்காட்சி பார்க்காதே என்று தடை விதிக்காதீர்கள்.

தேவையான நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், படிப்பை பாதிக்காத வகையில் பார்த்தால் தொலைக்காட்சி பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்த்துங்கள்.

உங்களது பணிச் சுமைகளையும், குடும்ப சூழலையும் அவர்கள் மேல் காட்டாமல், அவர்களுடைய இயல்பானத் தன்மையில் அவர்கள் வளர நீங்கள் வழிகாட்டுங்கள்.

அவர்கள் செல்லும் பாதையில் சரியாக செல்கிறார்களா என்பதை மட்டும் கண்காணித்துக் கொண்டே இருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil