Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடையில் சிறப்பு அக்கறை

கோடையில் சிறப்பு அக்கறை
, திங்கள், 31 மார்ச் 2008 (12:23 IST)
webdunia photoWD
கோடை என்றால் நமக்கே வியர்த்துக் கொட்டி சருமம் வாடிவிடும். மெல்லிய சருமத்தைக் கொண்ட குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்?

இந்த கோடையில் குழந்தைகளுக்கு என சில சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு ஜொலிக்கும் வகை‌யி‌ல் உடலை உறு‌த்து‌ம் ஆடைகளைத் தவிர்த்துவிட்டு பருத்தி மற்றும் எளிதாக உடுத்தவல்ல ஆடைகளை மட்டுமே இந்த கோடையில் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு அவ்வப்போது குடிக்க சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய குடிநீரை அளித்துக் கொண்டிருக்க வேண்டும்.

உலர்ந்த திராட்டையை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரில் கொதிக்கவைத்து பின்னர் திராட்சை திப்பிகளை எடுத்துவிட்டு அந்த நீரை பருக அளிக்கலாம். உடல் சூட்டை இது தணிக்கும்.

குழந்தைகளை காலையிலும், மாலையிலும் குளிப்பாட்டலாம். இல்லாவிடில் ஒரு வேலை குளிக்க வைத்துவிட்டு, மறுவேளை சூடான நீரில் துணியைக் கொண்டு உடலை துடைத்து விடலாம்.

குழந்தைகளின் துணிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளின் கைகளை அவ்வப்போது கழுவி விடுவதும் நல்லது.

webdunia
webdunia photoWD
பயத்தம் மாவை (பச்சப்பருப்பு) குழந்தைகளைக் குளிப்பாட்டப் பயன்படுத்தலாம். இதனை சோப்பிற்கு மாற்றாக கோடை முழுவதும் பயன்படுத்தலாம்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு தலைக்கு ஊற்றி விடுங்கள். ஏனெனில் வியர்த்து வியர்த்து தலையில் சீக்கிரம் அழுக்கு சேர்ந்துவிடும்.

அதிகமாக வேர்க்கும்போது அதனை துடைத்து விட வேண்டாம். வேர்க்கும்போது அதனை தடுக்கும் வகையில் துடைக்கும்போதுதான் வேர்க்குருக்கள் உண்டாகின்றன.

துடைப்பதற்கு பதிலாக அவர்களை காற்றுப்படும்படி நிற்கச் செய்து பின்னர் அவர்களை சுத்தப்படுத்தலாம்.

அதிக நேரம் வெயிலில் விளையாடவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்க வேண்டாம்.

வெயில் கொளுத்தும் சமயத்தில் குளிர்ந்த பானங்கள் எதையும் அருந்தக் கொடுக்கக் கூடாது.

உணவில் சி விட்டமின் நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது.

தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

வரண்ட சருமம் கொண்ட குழந்தைகளுக்கு சொரி, சிரங்குகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை மிகுந்த ஜாக்கிரதையாக பராமரியுங்கள்.

அதிகமாக உஷ்ணம் ஏற்பட்டால் இளநீரை குடிக்கக் கொடுக்கலாம்.

வீட்டிலேயே தயாரித்த தயிரை நன்கு கொதிக்க வைத்து அதனை சாதத்தில் ஊற்றி மதிய வேளைகளில் கொடுக்கலாம். தயிரை கொதிக்க வைப்பதால் அது சளி பிடிக்கும் வாய்ப்பைத் தவிர்க்கும்.

இரவில் மிக மெல்லிய ஆடைகளை அணிவித்து படுக்க வையுங்கள்.

இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அதனை அடுத்த வாரம் பார்க்கலாம்.

இதுபற்றி நீங்கள் ஏதேனும் அறிந்திருந்தால் எங்களுக்கு கூறுங்கள். உங்கள் கருத்துக்களும் அடுத்த இதழில் வெளியாகும்.

நன்றி.



Share this Story:

Follow Webdunia tamil