Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் உறுப்பு தானம் - சிறுவனின் முயற்சி

Webdunia
மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது தாயின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவரது மகன் சுரேஷ்குமார் (14) தூண்டுகோலாக இருந்துள்ளான்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வெள்ளைய கவுண்டம்பட்டியைச் சேர்ந்த மருதை என்பவரது மனைவி சாந்திக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்திக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டது.

மருதை - சாந்தியின் மகன் சுரேஷ்குமார், தனது தாயின் இந்த நிலையைக் கண்டு மனம் கலங்கினாலும், உடல் உறுப்பு தானத்தைப் பற்றி தனது தந்தைக்கு எடுத்துக் கூறினான்.

உடல் உறுப்பு மூலமாக தனது தாயின் மூலமாக பலர் உயிர் வாழ வாய்ப்பிருப்பதாக தனது தந்தையிடம் கூறினான். இதையடுத்து மருதையும் உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக் கொண்டார்.

உடனடியாக சாந்தியின் உடல் உறுப்புக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு, உடல் உறுப்புகள் பழுதடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது.

உடல் உறுப்பு தானம் தற்போது மக்களிடையே பெரும் விழிப்புணர்வு பெற்று வருகிறது என்பது இந்த சம்பவமே உதாரணம்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments