Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை‌க்கே‌ற்ற கேரளத்தின் கோவளம்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:13 IST)
தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கேரளத்திலுள்ள கோவளம் கடற்கரை மு‌க்‌கியமானதாகும்.



webdunia photo WD
கோவளம் கடற்கரைக்கு தற்போது பல்வேறு இடங்களில் இருந்தும் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். கோவளம் கடற்கரையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். அவை கலங்கரை விளக்கம், ஹவாய் கடற்கரை, சமுத்திர கடற்கரை என்பவையாகும்.

பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் மரங்களை அதிகம் காண முடியாது. கடற்கரையில் இருந்து வெகு தொலைவில்தான் ஒரு சில மரங்கள் இருக்கும். ஆனால் கோவளம் கடற்கரை‌க்கு என ஒரு தனி சிறப்பாக கட‌ற்கரையை ஒ‌ட்டி ஒருங்கே வளர்ந்துள்ள எ‌ண்ண‌ற்ற தென்னை மரங்களைக் காணலாம்.

கட‌ற்கரை‌க் கா‌ற்று‌ம், தெ‌ன்னை‌யி‌ன் கு‌ளி‌ர்‌ச்‌சியு‌ம் சே‌ர்‌ந்து ந‌ம்மை ம‌கி‌ழ்‌ச்‌சி‌க் கட‌லி‌ல் ஆ‌ழ்‌த்து‌கிறது.

கோவளக் கடற்கரையின் சிறப்பே, அது கடல் அலைகள் அற்ற கடற்கரை என்பதுதான். ஆழம் குறைவான, அலைகளற்ற, மிக நிதானமாக எழும்பி அமிழும் கடலில் ஆபத்தின்றி குளித்து விளையாடலாம்.

கடற்கரைக்குச் சென்றதும் நமது பொருட்களை எல்லாம் பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டு கடலை நோக்கிச் செல்லலாம். கோவளம் கடலில் இறங்கிவிட்டால் மீண்டும் கரை திரும்பவே மனம் வராது. அந்த அளவிற்கு அங்கு வரும் காற்றின் வேகமும், நீரின் குளிர்ச்சியும் நம்மை கட்டிப் போட்டு வைக்கும்.

webdunia photo WD
சரி இந்த கடற்கரை மணல் எல்லாம் வேண்டாம், தண்ணீரிலும் நனைய வேண்டாம், கடற்கரைக் காற்றை சுவாதித்தால் போதும் என்று சொல்பவர்களுக்கும் கோவளம் சிறந்த இடம்தான்.

ஏனென்றால் கடற்கரையை தொலைவில் இருந்தே ரசிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

webdunia photoWD
இயந்திர வாழ்க்கையில் ஒரு நாள் முழுவதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கழிக்க கோவளம் ஏற்ற இடம்.

வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக கோவளம் கடற்கரையைச் சுற்றி ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. பெரிய பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளன. கடற்கரையை ஒட்டிய தங்கும் விடுதிகளும் இங்கு சிறப்பாக செயல்படுகின்றன.

எ‌ன்ன கோவள‌த்தை‌ப் ப‌ற்‌றி‌ச் சொ‌ன்னது‌ம் இந்த கோடையை கோவலத்தில் அனுபவிப்பது என்று கிளம்பிவிட்டீர்களா...

உங்கள் பையில் கடற்கரையில் அணிந்து கொள்வதற்கான உடை, சூரிய ஒளியில் இருந்து சருமத்தைக் காக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

சென்னை உள்ளிட்ட பல முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து கோவளத்திற்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளுக்கு பஞ்சமே இல்லை.

webdunia photoWD
தனியாக வாகனம் எடுத்துக் கொண்டு செல்வதும் மிகவும் சிறந்ததுதான். ஏனென்றால் நமது பொருட்களை வைத்துக் கொள்ளவும். நாம் விரும்பும்போது அங்கிருந்து கிளம்பிக் கொள்ளவும் இயலும்.

என்ன கிளம்பிவிட்டீர்களா கோவள‌த்‌தி‌ற்கு?

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

Show comments