Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரஸ்வதி பூஜை செய்யும் முறை

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:35 IST)
அன்னையின் திருவுர ுவின் பார்வையில ் புத்த கங்களை வைத்து அதன ் முன்பாக வாழையிலை விரித்து அதில் படையலுக்கா க சமைக்கப்பட்டவைகள ை வைக் க வேண்டும்.

webdunia photoWD
சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்ற பிரசாதங்களை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழ ை இலைய ை வைத்த ு அதில ் பொற ி, கடல ை, அவல ், நாட்ட ு சர்க்கர ை, பழங்கள ை வைக் க வேண்டும ். செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும்.

எதற்கும் விநாயகரே முழு முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து

" சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சஸிவர்ணம் சதுர்புஜம்!
ப்ரசந்த வதனம் த்யாயேத் சர்வ
விக்நோப சாந்தயே"

- என்று கூறி விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும்.

சரஸ்வதி பூஜையின்போது "துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம" என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று.

பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.

பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகலகலாவல்லி மாலை பாடல்களை பாராயணம் செய்யலாம்.

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments