Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:42 IST)
சரஸ்வதி பூஜையன்று நாம் அல்லது நமது பிள்ளைகள் படிக்கும் புத்தகங்களுக்கு திலகமிட்டு சரஸ்வதி படத்திற்கு முன்பு வைத்து பூஜிக்கிறோம்.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி முன்பு நாம் படிக்கும் புத்தகங்களை வைத்து அவளிடம் கல்வியை வரமாகக் கேட்பது போன்றது இந்த பூஜையாகும்.

இந்த பூஜைக்கு முதலில் வீட்டை நன்றாகக் கழுவி கோலங்கள் இட்டு அழகுப்படுத்த வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள சரஸ்வதி படம் அல்லது பொம்மையைப் பிரதானமாக எடுத்து மணைமேல் வைத்தல் வேண்டும்.

படத்தின் முன்னால் கோலம் போட்ட பலகையை வைத்து அதன் மேல் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். சரஸ்வதி பூஜை நம்முடைய கல்விக்கான பூஜை.

எனவே இந் த பூஜையில் புத்தகங்கள் முக்கியமான இடம்பெற வேண்டும். வீட்டில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்கள ையும், பேனா போன்றவைற்றையும் திலகமிட்டு பூஜையில் வைக்க வேண்டும்.

விஜயதசமி அன்று பூஜையில் வைத்து பூஜிக்கும் புத்தகங்களை அன்று முழுவதும் பூஜையறையிலேயே வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக வந்து, சரஸ்வதி தேவியை வணங்கிவிட்டு புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும் என்பது நமது முறையாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments