Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள்

சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள்

Webdunia

, வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:42 IST)
சரஸ்வதி பூஜையன்று நாம் அல்லது நமது பிள்ளைகள் படிக்கும் புத்தகங்களுக்கு திலகமிட்டு சரஸ்வதி படத்திற்கு முன்பு வைத்து பூஜிக்கிறோம்.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி முன்பு நாம் படிக்கும் புத்தகங்களை வைத்து அவளிடம் கல்வியை வரமாகக் கேட்பது போன்றது இந்த பூஜையாகும்.

இந்த பூஜைக்கு முதலில் வீட்டை நன்றாகக் கழுவி கோலங்கள் இட்டு அழகுப்படுத்த வேண்டும். பின்னர் வீட்டில் உள்ள சரஸ்வதி படம் அல்லது பொம்மையைப் பிரதானமாக எடுத்து மணைமேல் வைத்தல் வேண்டும்.

படத்தின் முன்னால் கோலம் போட்ட பலகையை வைத்து அதன் மேல் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும். சரஸ்வதி பூஜை நம்முடைய கல்விக்கான பூஜை.

எனவே இந்த பூஜையில் புத்தகங்கள் முக்கியமான இடம்பெற வேண்டும். வீட்டில் உள்ள மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களையும், பேனா போன்றவைற்றையும் திலகமிட்டு பூஜையில் வைக்க வேண்டும்.

விஜயதசமி அன்று பூஜையில் வைத்து பூஜிக்கும் புத்தகங்களை அன்று முழுவதும் பூஜையறையிலேயே வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக வந்து, சரஸ்வதி தேவியை வணங்கிவிட்டு புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும் என்பது நமது முறையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil