தமிழகத்தை உலுக்கிய சித்த மருத்துவ மாணவிகளின் மர்ம மரணம்!

தமிழகத்தை உலுக்கிய சித்த மருத்துவ மாணவிகளின் மர்ம மரணம்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (13:08 IST)
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் சித்த மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் படித்த 3 மருத்துவ மாணவிகள் ஒரே புடவையை சுற்றிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை இந்த வருட தொடக்கத்திலேயே உலுக்கியது.


 
 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே இயங்கி வரும் தனியார் சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு ஹோமியோபதி மருத்துவம் படித்த வந்த மோனிசா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 மாணவிகள் ஒரே புடவையை சுற்றிக்கொண்டு கல்லூரிக்கு எதிரே இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
 
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஒருவரின் கையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் தங்களுடைய தற்கொலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என்று எழுதப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து இந்த கல்லூரியின் தாளாளர் வாசுகி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு நீண்டு முயற்சிக்கு பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கு இன்னமும் முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எகிறும் மாடுகள்!. எஸ்கேப் ஆகும் வீரர்கள்!.. களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!...

விஜய்யின் உருவம் பொறித்த த.வெ.க கட்சியின் சீருடை எரிப்பு.. போகி பண்டிகையில் சர்ச்சை..!

நலமும் வளமும் பெருகட்டும்!.. தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து!...

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்...

அடுத்த கட்டுரையில்
Show comments