Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருபானந்த வாரியாரின் அற்புத ஆன்மிக துளிகள்!

Webdunia
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.

 
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன் எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம். இருள்  இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று பெருந்துயரத்தைச் செய்யும்.
 
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல் நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி விடுவான். எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர் போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம்.
 
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட வேண்டும்.  வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா.. சிறப்பான தேரோட்ட நிகழ்வு..!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும்! - இன்றைய ராசி பலன்கள் (07.04.2025)!

இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (06.04.2025)!

பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்.. குவிந்த பக்தர்கள்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments