Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்குரு அவர்களின் சிந்தனை துளிகளில் சில

சத்குரு அவர்களின் சிந்தனை துளிகளில் சில

Webdunia
உங்களின் வாழ்வின் அனுபவமே, நீங்கள் வாழ்க்கையில் ஆழமாக ஈடுபடுவதில் தான் இருக்கிறது. ஈடுபாட்டுடன் நீங்கள் செய்பவை எல்லாம் எப்போதும் ஆனந்தமாக உள்ளதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?


 


ஆழமான ஈடுபாடு இருந்தாலொழிய வாழ்க்கையின் அழகை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
 
யார் வேண்டுமானாலும் கடவுளை நேசிக்கலாம். ஏனெனில் கடவுள் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆனால், இந்தக்கணம் உங்கள் அருகில் 
 
இருப்பவரை நீங்கள் நேசிப்பதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுதான் சவால். இதைச் செய்வதற்கு மிகவும் தைரியம் தேவைப்படுகிறது.
 
மனிதராகப் பிறந்துவிட்டால் நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்கிறீர்களோ, அதிலேயே சிக்கிவிடக்கூடாது. உங்களுக்கான சூழ்நிலைகளை நீங்கள் தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சூழ்நிலைகளின் தாக்கத்தில் வாழ்வது விலங்கின் தன்மை, மனிதரின் தன்மை, சூழ்நிலைகளை உருவாக்குவது.
 
உங்கள் வாழ்க்கையில் அழகான சூழ்நிலைகள் வருகின்றன. கொடுமையான சூழ்நிலைகள் வருகின்றன. உங்களுக்கு ஒரே வாய்ப்பு தான். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி நீங்கள் மேலும் சிறந்தவராக, வலிமையானவராக மாறலாம் அல்லது உடைந்து நொறுங்கிப் போகலாம்.

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

Show comments