Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரமலான் நோன்பின் சிறப்புகள் குறித்து நபிகளார் கூறுவது...!

Webdunia
ரமலான் நோன்பு இருக்கும் மாதத்தில் தாமாக முன்வந்து உளபூர்வமாக ஒரு நற்செயல் புரிகிறாரோ, அது மற்ற மாதங்களில் அவர் ஆற்றவேண்டிய கட்டாய கடமைக்கான நற்கூலியைப் பெற்றுத் தரும்.
ஒருவன் தன் குடும்ப உறவுகள், கொடுக்கல் வாங்கல், வணிகத் தொடர்புகள், அண்டை அயலார் உறவுத் தொடர்புகளில் செய்யும் தவறுகள் ஆகியவற்றுக்குத் தொழுகையும் தர்மமும் பரிகாரம் என்கிறார் நபிகளார்.
 
எவர் ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையின் கூலியைப் பெறுகிற எண்ணத்துடனும் நோற்பாராயின், அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன்  மன்னித்துவிடுகிறான்.
எவர் ஒருவர் ரமலான் மாத இரவுகளில் இறை நம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் பெற்றுக் கொள்ளும் ஆவலுடனும் தொழுகையைத்  தொழுகிறாரோ அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்து விடுகிறான் என்று சொல்லும் நபிகளார், இப்படி எச்சரிக்கையும் செய்கிறார். எவர்  நோன்பு நோற்ற நிலையில், பொய் சொல்வதையும் பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும்  தாகித்திருப்பதையும் குறித்து இறைவனுக்கு எவ்வித அக்கரையுமில்லை என்று கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வரும்! - இன்றைய ராசி பலன்கள் (19.03.2025)!

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியர்-தெய்வானை திருக்கல்யாணம்.. குவிந்த பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும்! - இன்றைய ராசி பலன்கள் (18.03.2025)!

ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்: தேரோட்ட தேதியும் அறிவிப்பு..!

14,000 பேர் பங்கேற்ற சத்குருவின் தியான நிகழ்ச்சி! - டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 64 நாடுகளில் இருந்து மக்கள் பங்கேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments