Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் அருளுரை

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் அருளுரை

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் அருளுரை
, வெள்ளி, 22 ஜனவரி 2016 (12:10 IST)
சத்குரு அவர்களின் ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத, பொதுத் தொண்டு நிறுவனமாகும்.


 


இந்நிறுவனம் சத்குரு அவர்களால் 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது உலகளவில் 150 மையங்களைக் கொண்டு மனிதநேய அமைப்பாக திகழும் இந்த அமைப்பு, நாடு மற்றும் கலாச்சாரம் போன்ற எல்லைகள் தாண்டி இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
 
சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகப் பயிற்சிகள், உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றில் உள்ள எல்லைகளை உடைப்பதற்கு அரிய வாய்ப்பினை அளித்து, மனிதனின் இயல்புநிலையான விடுதலை, அன்பு, மகிழ்ச்சி இவற்றை அடைய வழி வகுக்கிறது.
 
சத்குரு அவர்களின் அருளுரை இந்த உலகில் வாழும் ஜீவராசிகளில் மிகவும் உன்னத நிலைக்கு இட்டு செல்கிறது. மனித குலம் மற்ற உயிர்களைக் காட்டிலும் மனித குலம் புத்தி, பலம், மூளையின் பலத்தால் சக்தி பெற்றிருக்கிறது.
 
எனவே உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் தங்கள் உடலைத் தகுந்தவாறு பாதுகாத்தால் அவர்களால் அனைத்தையும் வெல்ல முடியும். கடவுள் தானே நேரடியாக 9 முறை இந்தியாவில் அவதரித்தார். மற்ற நாடுகளுக்கு தன் தூதர்களை மட்டுமே அனுப்பினார். எனவே, இந்தியர்கள் மட்டுமே புத்தி, உடலால் பலம் பெற்றவர்கள்.
 
நாம் நமது உடலை சரியாகப் பராமரித்தால், நாமும் இறைநிலையை அடைவது உறுதி என்று சொல்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil