திருப்பதிக்கு ஒரே நாளில் காரில் சென்று ஏழுமலையானை தரிசித்துவிட்டு வீடு திரும்பும் சுற்றுலாத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
திருப்பதிக்கு செல்வது என்றால் ஏராளமான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். போக வர ரயில் அல்லது பேருந்து சீட்டு முன்பதிவு, தரிசனத்துக்கு முன்பதிவு, அங்கு தங்கும் விடுதிக்கான ஏற்பாடுகள் என எல்லாவற்றையும் செய்துவிட்டுத்தான் திருப்பதி கிளம்ப முடியும்.
ஆனால், இதை எல்லாம் மிகவும் எளிமையாக்கியுள்ளது இந்தியன் ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா கழகம். ஆம், திருப்பதிக்கு செல்வதற்காக இவர்களிடம் கட்டணம் செலுத்திவிட்டால் போதும்.
நம்முடைய வீட்டிற்கே வந்து காரில் திருப்பதிக்கு அழைத்துச் சென்று அன்று இரவே வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவக்ளுக்கு மட்டுமே தற்போது இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தில் 4 பேர் பயணம் செய்ய, ஒருவருக்கு ரூ.1,280 கட்டணம்.
மேலும் ரயில் மூலம் கேரளா சென்று, குமரகம் (படகு இல்லம்) செல்லவும் ஐஆர்சிடிசி புதிய சுற்றுலா திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளது.