புராணங்களில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள மூலவச் சிலைக்கு அந்த காலத்தில் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரும் காளிகாம்பாளுக்கு உண்டு.
காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீகாளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. அதனை நினைவூட்டும் வகையில் தான் மேற்கு நோக்கி அர்த்தபத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகாளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.
மூல கர்ப்பக்கிரகம்
மூல கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாளின் திருக்கைகளில் அங்குசமும், பாசமும், நீலோத்ப மலரும் காட்சியளிக்கிறது. இடது கை வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. வலது காலை தாமரையில் வைத்தபடி அன்னை காட்சி தருகிறார்.
webdunia photo
WD
இந்த கருவறையைச் சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், நவக்கிரகங் கள், வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீமுருகர், ஸ்ரீவீரபஹாமங்கர் மற்றும் அவரது சீடர் சித்தையா, அன்னையின் பள்ளியறை, ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதி, ஸ்ரீதுர்கா, ஸ்ரீசண்டிகேஸ்வரர், பிரம்மா, சூரிய சந்திரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
வெளிப்பிரகாரத்தை சுற்றி ஸ்ரீ சித்தி விநாயகர், கொடி மரம், வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ வட கதிர்காம முருகன், ஸ்ரீசித்திபுத்தி விநாயகர், ஸ்ரீவீரபத்திர மகாகாளி, ஸ்ரீநாகேந்திரர், ஸ்ரீவிஸ்வபிரம்மா, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன.