மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது!

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2008 (14:01 IST)
மதுர ை ‌ மீனா‌ட்‌ச ி அ‌ம்ம‌ன ்- சு‌ந்தரேசுவர‌ர ் ‌ திரு‌க்க‌ல்யாண‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி நாள ை நடைபெறு‌கிறத ு. இதையொ‌‌ட்ட ி கோ‌யி‌ல ் அற‌ங்காவல‌ர்க‌ள ் இத‌ற்கா ன ஏ‌ற்பாடுகள ை செ‌ய்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏ‌ப்ர‌ல ் 9 ஆ‌ம ் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 8ஆம் நாளான நேற்று மாலை மதுரையை அரசாளும் மீனாட்சிக்கு மகுடம் சூட்டும் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாஜ னம் பூஜை, பஞ்சகவ்ய பூஜை, கும்பபூஜை ஆகியவை நடத்தப்பட்டது.

அதன் பிறகு வைர கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலிலுள்ள அனுக்ஞை விநாயகரிடமிருந்து செங்கோலும் கிரீடமும் பெறப்பட்டு, இரவு 7.22 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சூட்டப்பட்டது. பின்னர் மீனாட்சி அம்மனுக்கு பச்சை பட்டாலான பரிவட்டமும், வேப்பம்பூ மாலையும் சாத்தப்பட்டது.

9 ஆம் நாளான இன்று மாலை 6 மணிக்கு வடக்கு மாசிவீதி, கிழக்கு மாசி வீதி சந்திப்பு இடத்தில் லாலாஸ்ரீ ரெங்க சத்திரம் திருக்கல் யாண மண்டபத்தில் இந்திர விமானத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி திக் விஜயம் செய்கிறார்.

சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் விழாவாக கருதப்படும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை (18ஆ‌ம ் தே‌த ி) காலை 9.30 மணி முதல் 9.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடக்கிறது. முன்னதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார்கள்.

இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50,000 மே‌ற்ப‌ட் ட பக்தர்கள் மதுரைக்கு வருவதால் நாளை மதுரையே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும். பக்தர்களின் தாகத்தை தீர்க்க மதுரை தெரு ஓர‌ங்க‌ளி‌ல ் நீர், மோர், சர்பத் போன்றவை வழங்கப்படும்.

மறுநாள் 19ஆ‌ம ் தேதி அதிகாலை 4.08 மணி முதல் 4.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி- அம்மன் தேருக்கு வந்து எழுந்தருளுகிறார்கள். காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

இத்தேர் நான்கு மாசிவீதி வழியாக சென்று மீண்டும் தேரடிக்கு சென்றடையும். இதிலும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செய்வர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

20 ஆ‌ம ் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜையும், இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இத ு கு‌றி‌த்த ு இ‌ந்த ு அற‌நிலைய‌த்துற ை இண ை ஆணைய‌ர ் ‌ ப ி. ராஜ ா கூறுக‌ை‌யி‌ல ், ‌ திரு‌க்க‌ல்யாண‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌சிய ை அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ள ் க‌ண்ட ு க‌ளி‌க் க கோ‌யி‌ல ் இணையதளமா ன www.maduraimeenakshi.org ‌ ல ் நே‌ரடியா க கா‌ட்ட‌ப்படு‌கிறத ு. ப‌க்த‌ர்க‌ள் அ‌திகமாக வருவதா‌ல் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌திக அள‌வி‌ல் ஈடுபடு‌த்த‌ப்படுவா‌ர்க‌ள் எ‌‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த கங்கை'!

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

Show comments