Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்குரு பற்றிய புகைப்பட புத்தகத்தை அனுபம் கேர் வெளியிடுகிறார்

சத்குரு பற்றிய புகைப்பட புத்தகத்தை அனுபம் கேர் வெளியிடுகிறார்
, திங்கள், 19 செப்டம்பர் 2011 (19:00 IST)
புகழ்பெற்ற நடிகர் மற்றும் சமூக சேவகரான அனுபம் கேர் "You - Sadhguru Jaggi Vasudev, A spiritual Possiblity" என்னும் புகைப்பட புத்தகத்தை வரும் 20ம் தேதி இரவு 7 மணிக்கு மும்பையிலு‌ள்ள ஷண்முகானந்தா கூடத்தில் வெளியிட இருக்கிறார். அதைத் தொடர்ந்து சத்குரு மற்றும் அனுபம் கேர் இருவரும் பங்கேற்கும் கே‌ள்வி பதில் கலந்த உரையாடல் நிகழ்ச்சி ஞானியுடன் ஒரு உரையாடல் என்னும் தலைப்பில் ("In conversation with the mytic") இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட உ‌‌ள்ளது.

இணையதள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஈஷா அறக்கட்டளையின் புதிய வெளியீடான "Life and death in one Breath" என்ற புத்தகத்தின் (e-book) பதிப்பு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

"You"

'You' புத்தகத்தின் ஆசிரியரான பல்லவி குப்தா, சத்குருவின் வாழ்க்கை பிரம்மாண்டத்தையும், அழகையும் தொடர்ச்சியான புகைப்படங்க‌ள் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பது படிப்பவர்களை வேறொரு தளத்தில் பயணிக்க வைக்கிறது. இதில் விரிந்திருக்கும் வசீகரமான காட்சிக‌ள் சத்குருவின் வாழ்வை பல கோணங்களில் காட்டுகிறது. குழந்தை பருவம் முதல் இளைஞராகவும், குடும்பத் தலைவராகவும், தியானலிங்க பிரதிஷ்டையில் ஒரு யோகியாகவும், இந்த யுகத்தின் ஞானியாகவும், இதே இயல்பான எளிமையில் உலக மாநாட்டிலும், இமயமலையின் சிகரங்களிலும் சத்குருவை காட்சிப்படுத்துகிறது இந்த புத்தகம்.

ஆசிரியருடைய வார்த்தை வெளிப்பாட்டுடன், புகைப்படம் பற்றிய விவரங்களும் இதில் உ‌ள்ளன. இதுபற்றி அவர் கூறுகையில்... "இந்த புத்தகம் உருவாக்க கிடைத்த வா‌ய்ப்பை என் அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். ஏனெனில் இது வாழ்க்கையின் பலவிதமான நம்பமுடியாத தன்மையை வெளிப்படுத்தி, உலகத்துக்கு பரிமாற வேண்டும் என்கிற உத்வேகத்தையும் உண்டாக்குகிறது. இது வெறும் ஊக்கத்திற்காக மட்டும் அல்ல, ஒரு மனித பிறவியின் உச்சமான சாத்தியத்திற்கும் இது ஒரு சான்று".

தொடர் உரையாடல் நிகழ்ச்சி...

பல பிரபலங்க‌ள் அடுத்தடுத்து பல தலைப்புகளுடன் இணையதளத்தில் சத்குருவுடன் உரையாடும் இந்த தொடர் உரையாடல் நிகழ்ச்சி நவீன யுகத்தையும், பழமையான ஞானத்தையும் இணைத்து வாழ்வின் பல ஆழமான தன்மைகளை உணர்த்தும்.

இதில் முதல் பகுதியாக திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் சத்குருவுடன் நிகழ்த்தும் உரையாடல்க‌ள் இடம் பெறு‌கிறது. இதன்பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் ரேடோ (Chris Rado) (கார் பந்தயக்காரர்) அருந்ததி சுப்ரமணியம் (கவிஞர், எழுத்தாளர்) ஆகியோரும் தொடர்ந்து பங்கேற்றனர்.

ஞானி...

ஒரு யோகியாகவும், கவிஞராகவும், ஞானமடைந்த குருவாகவும் விளங்கும் சத்குரு அவர்களின் வாழ்வும், சேவையும் யோகாவை ஒரு நவீன அறிவியலாக நமக்கு காட்டுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வ தொண்டர்க‌ள் மூலமாக சத்குரு அவர்க‌ள் மனித இனத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பணிக‌ள் மகத்தானவை.

பத்ம ஸ்ரீ அனுபம் கேர்

பத்ம ஸ்ரீ அனுபம் கேர் (நடிகர் மற்றும் சமூக சேவகர்) இந்த நிகழ்ச்சியில் (In conversation with the mystic) இணைய தளத்தில் பார்வையாளர்க‌ள் அனுப்பும் கே‌ள்விகளை சத்குருவுடன் கேட்க இருக்கிறார்.

பலவகைகளில் புகழ்பெற்ற அனுபம் கேர் 400க்கும் மேற்பட்ட படங்களில் 100க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனுபம் கேர் அவர்க‌ள் நிறுவிய அறக்கட்டளை வறுமை கோட்டிற்குக் கீழ் உ‌ள்ள குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பாடுபடுகிறது. இந்தியாவில் உ‌ள்ள நடிப்பு கலைக்கான கல்லூரிகளில் முக்கியமான "Actor Prepares" என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் இவர் தானாக முன்வந்து பல கலைஞர்களுக்கு நடிப்பின் கலைநயத்தை கற்றுக் கொடுக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil