Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்தசஷ்டி விழா அக். 29ல் தொடக்கம்!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (17:55 IST)
சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் மகா கந்தசஷ்டி விழா வரும் 29ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

29 ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை மகா கந்த சஷ்டி இலட்சார்ச்சனை விழா நடைபெறவுள்ளது. இதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாள் மாலையிலும் சாமி புறப்பாடு மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவம்பர் 3ஆம் தேதியன்று மாலை 7 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி தெற்கு கோபுர வாயிலில் நடைபெறும். மறுநாள் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், டாக்டர் சீர்காழி கோ. சிவ சிதம்பரம், துணை ஆணையர்/செயல் அலுவலர் பி. வாசுநாதன் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து, லாபம் கூடும்! – இன்றைய ராசி பலன்கள்(03.01.2025)!

கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்: குழந்தை வரம் தரும் கடவுள்..!

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது! – இன்றைய ராசி பலன்கள்(02.01.2025)!

ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா: குவிந்த பக்தர்கள்..!

இந்த ஆண்டின் முதல் நாள் எப்படி இருக்கும்? – இன்றைய ராசி பலன்கள்(01.01.2025)!

Show comments