மெத்தனால் நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன்.. சிபிசிஐடி போலீசார் அதிரடி..!

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (15:45 IST)
கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் மெத்தனால் வழங்கிய நிறுவன உரிமையாளர்களிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கைதான மாதேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மெத்தனால் வழங்கிய நிறுவன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் பத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் மெத்தனால் வழங்கிய நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் விசாரிக்க சிபிஎஸ்ஐடி அதிகாரிகள் முடிவு செய்தனர். 
 
இதனை அடுத்து மெத்தனால் வழங்கிய நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை செய்த பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் சில கைது நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments