Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி மரணத்திற்கு காத்திருக்கும் பெண்

Advertiesment
இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டி மரணத்திற்கு காத்திருக்கும் பெண்
, வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (04:05 IST)
கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் தான் இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 

 
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்லுக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசி (வயது 55). ரோசியின் பெற்றோருக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ரோசி 5ஆவது மகள் ஆவார். கடைசியாக தம்பி பிறந்துள்ளார்.
 
மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் ரோசி மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார். உறவினர் யாரும் இல்லாததால், அவரது இறப்பிற்கு பிறகு, யார் உடலை அடக்கம் செய்வது என்று அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பியதை அடுத்து ரோசி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
 
இதனால், ரோசி தான் கூலி வேலைக்கு சென்று, அதில் வரும் வருமானத்தை வைத்து, சிறிய அளவில் நிலம் ஒன்று வாங்கி வீடு ஒன்று கட்டிக்கொண்டுள்ளார்.
 
மேலும், தன் வீடு அருகே ஒரு கல்லறை கட்டி அதன் மீது சிலுவை குறியையும், அதன் அருகே தனது உருவ படத்தையும் வரைந்து வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பயங்கரம் : திமுக பெண் நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொலை