யூடியூபர் இர்பானின் கார் மோதி விபத்து- ஆர்.டி.ஓ பரிசோதனையில் சிக்கல்

Webdunia
திங்கள், 29 மே 2023 (21:10 IST)
யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் பிரபல யூடியூபர் கார் மோதி பத்மாவதி என்ற  55 வயது  பெண் ஒருவர் பலியானார். இந்த காரை அவரது மைத்துனர் அசாருதீன் ஓட்டியதால் அவர் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சிசிடிவி காட்சியின் மூலம் விபத்துக்குள்ளான காரில் இர்பான் பயணம் செய்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விபத்து தொடர்பாக கார் ஓட்டுனர் அசாருதீன் மீது மட்டும் 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய யூடியூபர் இர்பானின் சொகுசு காரை செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற போலீசார், உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments