பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

Siva
புதன், 21 மே 2025 (16:01 IST)
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, ஹரியானாவை சேர்ந்த யூடியூப்பர்  ஜோதி மல்கோத்ரா கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், அதேபோல் வேறு சில யூடியூபர்களையும் காவல்துறை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் சிலர் தமிழக யூடியூபர்கள் என்றும் கூறப்படுவதால், அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக, சில சர்ச்சைக்குரிய செயல்களை செய்து, ஆளும் கட்சியின் ஆதரவால் தப்பித்து வருகிற யூடியூபர் ஒருவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 
 
அதேபோல், தமிழகத்திலேயே அதிக ஃபாலோயர்களை வைத்து கொண்டு பொது பிரச்சனைகளை அலசி வீடியோக்களை வெளியிட்டு வருகிற நபர் ஒருவரையும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
யூடியூபர்கள் தங்கள் வருமானத்திற்காக எல்லை மீறி சில செய்திகளை வெளியிட்டு வருகிற சூழ்நிலையில், இனிமேல் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, யூடியூபர்களை கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments