Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் போதையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய என்ஜினியர்

காதல் போதையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய என்ஜினியர்
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (16:48 IST)
பல்லாவரம் அருகே சந்தையில் காதலி வெறுத்ததால் என்ஜினியர் ஒருவர் இளம்பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.


 

 
கருணாகரன்(23) என்பவர் போரூரில் கம்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பல்லாவரம் சந்தை சாலையில் மதி என்ற பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார். அதை அந்த பெண் தடுத்ததால் கையில் பட்டுள்ளது. 
 
அதில் அந்த பெண் கூச்சலிட அங்கு இருந்த மக்கள் இளைஞனிடமிருந்து பெண்ணை காப்பாற்றி, அவனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் அவனை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவன் கொலை செய்வதற்கான காரணத்தை கூறினான். 
 
மதி பல்லாவரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி மின்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் தூரத்து உறவுமுறை என்பதால் சிறுவயதிலேயே பழக்கம் ஏற்பட்டது.
 
சிறுவயதில் நட்பாய் தொடர்ந்த பழக்கம், பருவ வயதில் காதலாய் மாறியது. இது அந்த பெண்ணின் வீட்டுக்கு தெரியவந்தது. அவரின் பெற்றோர்கள் கருணாகரன் உனக்கு சரி வர மாட்டான். அவனை மறந்து விடு என்று கூறினார்கள். 
 
முடிவு எடுக்க முடியாமல் தவித்த மதி, சற்று ஒதுங்க தொடங்கினால். காதல் போதையில் கருணாகரன் விடாமல் மதியை சந்திக்க சென்றுள்ளான். சந்திப்பில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கருணாகரன், உனக்கு வேறு யாருடனே பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூற, ஆத்திரமடைந்த மதி காலில் இருந்த செருப்பை கொண்டு அடித்து உள்ளார்.
 
பதிலுக்கு கருணாகரன் கத்தியால் குத்தியுள்ளான். அப்போதுதான் மதி அதை தடுத்து கூச்சலிட மக்கள் அவளை காற்றியுள்ளார்கள். 
 
அந்த பெண்ணிடம் காவல் துரையினர் விசாரித்தபோது, ‘எனக்கு காதல் இல்லை, கருணாகரனுடன் நட்பு ரீதியில்தான் பழகினேன்’ என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கடையில ரிசர்வ் வங்கி பணத்தையே திருடிய கொள்ளையர்கள்