Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் காதல்: சிறுமியை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்!

பேஸ்புக் காதல்: சிறுமியை லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்!

Webdunia
வியாழன், 4 மே 2017 (15:15 IST)
சமீப காலமாக பேஸ்புக் மூலமாக காதலித்து பின்னர் அது பலாத்காரத்தில் முடியும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. செய்திகள் அடிக்கடி வரும் சம்பவங்களாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.


 
 
சமீபத்தில் திருப்பூர் சிறுமி ஒருவருக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்மந்தப்பட்ட 8 வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை 21 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பது போல் நடித்து பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
 
திருப்பூரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கும் அதே ஊரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடவில் காதலாக மாறி கடந்த 19-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.
 
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என திருப்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். வீட்டை விட்டு ஓடி சென்ற சென்னையை சுற்றி பார்த்துவிட்டு புதுச்சேரிக்கு சென்று லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதற்காக சிறுமியின் நகையை விற்றுள்ளார் அந்த வாலிபர்.
 
சிறுமியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய அந்த வாலிபர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதனையடுத்து லாட்ஜில் தனியாக அழுதுகொண்டிருந்த சிறுமியை அந்த லட்ஜின் உரிமையாளர் பிராபகரனும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
 
அவரிடம் இருந்து தப்பி அந்த சிறுமி திருப்பூருக்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனையடுத்து திருப்பூரில் தலைமறைவாக இருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லாட்ஜ் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு ரூ.4 கோடி வரிவிதிப்பா? - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கடிதம்!

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

$100 பில்லியன் மதிப்பு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அம்பானி, அதானி வெளியேற்றம்: என்ன காரணம்

சென்னைக்கு இது கடைசி மழை இல்லை.. இன்னும் மழை இருக்குது: தமிழ்நாடு வெதர்மேன்..!

சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்? அறப்போர் இயக்கம் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்