Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை அடைத்து வைத்துக் கொடுமை செய்த பெற்றோர் - காதலன் எடுத்த அதிர்ச்சி முடிவு !

சேலம்
Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (12:12 IST)
சேலம் மாவட்டத்தில் தனது மகளின் காதலைப் பிரிக்க நினைத்த பெற்றோர் மகளை வீட்டிலேயே அடைத்துக் கொடுமைப் படுத்தியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புள்ளாகவுண்டம்பட்டியில் வசிக்கும் இளைஞர் ரவிஷங்கர். இவருக்கும் அப்பகுதியில் வசித்து வந்த ஒருப் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலை அறிந்த  பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலை ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் பெண்ணை வீட்டிலேயே போட்டு அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பலமுறை ரவிஷங்கர் தனது காதலியைப் பார்க்கசென்ற போதும் அவரை பார்க்கவிடாமலும் உறவினரகளை ஒன்றுதிரட்டி அடித்தும் மிரட்டியும் விரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரவிஷங்கர் செல்போன் டவர் மேல் ஏறி அங்கிருந்து கீழேக் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் வாட்ஸ் ஆப்பில் தனது காதலியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை குறித்துப் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments