Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழியில் செல்லும் பெண்களை தொடர்ந்து கேலி செய்த வாலிபர் கைது

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (18:05 IST)
வழியில் செல்லும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்த சேர்நத சங்கர் [35] என்பவர், சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில், அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோரை சீண்டியுள்ளார். ஆனாலும், தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் தர தயங்கியுள்ளனர்.
 
இதனால், மேலும் மேலும் தொடர்ந்து, மாலை நேரங்களில் அங்கு தனியாக வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், ஓட்டப்பாறையை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம், அந்த வாலிபர் தகாத செயலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது, அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் சங்கரை பிடித்துள்ளனர்.
 
சங்கீதா அளித்த புகாரின்படி சென்னிமலை காவல் துறையினர், சங்கரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்