Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முதலமைச்சராக வேண்டும்... என்னை விட நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும்: சரத்குமார்

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (10:13 IST)
விருதுநகரில் நடைப்பெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார்,  நான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஏனென்று கேட்டால், என்னை விட, என்னால் ஒரு நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும் என்று கூறினார்.


 

 
விருநகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியதாவது:-
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாநில அரசு சிறந்த வகையில் கையாண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் பொறுமையாக சிறப்பாக செயல்படுகிறார். மாணவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
 
 நான் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஏனென்று கேட்டால், என்னை விட, என்னால் ஒரு நல்ல முதலமைச்சரை உருவாக்க முடியும். இளைஞர்களை அரசியலுக்கு வாருங்கள்.. வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோமே, அவர்களில் இருந்து ஒருவர் முதலமைச்சரானால் பெருமைப்படுவோம், என்றார்.
 
சமக தலைவர் சரத்குமார் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரையும் பாராட்டியுள்ளார், மாணவர்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றும் கூறியுள்ளார். தான் முதலமைச்சராக வேண்டும் என்று குறிப்பிட்ட சரத்குமார், இளைஞர்களில் ஒருவரை நல்ல முதலமைச்சராக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு நிகழ்ச்சிகள் ரத்து.. அப்பல்லோ நோக்கி விரையும் குடும்பத்தினர்.. முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து துரைமுருகன்..!

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments