Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திரி காட்டில் கள்ளக்காதலனுடன் கசமுசா..! துணைக்கு சென்ற தோழி சிக்கி பரிதாபம்

Webdunia
சனி, 13 ஜூன் 2015 (16:59 IST)
திருமணமான இளம்பெண் முந்திரி காட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது பிடிபட்டார். துணைக்கு சென்ற தோழியும் காவல் துறையிடம் சிக்கி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் நேற்று முன்தினம் மாலை வேளையில் 2 இளம்பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்களை பின் தொடர்ந்தவாறு வாலிபர் ஒருவரும் அந்த பெண்களிடம் சில்மிஷம் செய்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
 
அவ்வழியாக சென்று கொண்டிருந்த சில வாலிபர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அந்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து இவர்களும் சென்றுள்ளனர். ஆனால், சிறிது தூரம் செல்வதற்குள் வாலிபரும், இளம்பெண்களும் மாயமாகி மறைந்துவிட்டனர்.
 
இதனையடுத்து அந்த வாலிபர்கள் சிலர் தென் தாமரைக்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது இரண்டு இளம்பெண்களை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று விட்டதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
 
வாலிபர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அங்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆண்டிவிளையில் அருகிலுள்ள முந்திரி தோப்பில் ஒரு வண்டி நின்றுள்ளது. அப்போது ஒரு வாலிபர் வண்டியை எடுக்க வந்தபோது அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
 
முதலில், உளறிய அந்த வாலிபர் பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார். 2 பெண்களில் ஒருவருடன் எனக்கு கள்ளத் தொடர்பு உள்ளது என்றும், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
 
அருகே பதுங்கியிருந்த 2 இளம்பெண்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரித்தனர். வாலிபருக்கு திருமணமாகாததும், 2 பெண்களுக்கும் ஏற்கனவே திருமணமான விஷயமும் தெரியவந்ததை அடுத்து 2 பெண்களின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
 
கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த பெண், ’அந்த வாலிபரை தான் திருமணம் செய்து உள்ளதாகவும், அவருடன் தான் செல்வேன்’ என்றும் தெரிவித்துள்ளார். உறவினர்கள் மற்றும் காவல் துறையினரின் அறிவுறுத்தலை அடுத்து அவர் தனது கணவருடன் செல்ல முடிவெடுத்தார்.
 
இதேபோல கள்ளக் காதலிக்கு துணையாக வந்த பெண் தனது கணவரை பார்த்ததும் ’என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு தவறும் செய்யவில்லை. தோழி என்னை துணைக்கு அழைத்தார். அவருடன் சென்று மாட்டிக்கொண்டேன்’ என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். கணவரும் அதனை ஏற்றுக் கொண்டார். பின்னர் 3 பேரையும் காவல் துறையினர் அவர்களை எச்சரித்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments