Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல் கலாம் மறைவு: துக்கம் தாங்காமல் இளைஞர் தற்கொலை

அப்துல் கலாம் மறைவு: துக்கம் தாங்காமல் இளைஞர் தற்கொலை
, வெள்ளி, 31 ஜூலை 2015 (12:16 IST)
திருப்போரூரை அடுத்த இள்ளலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர் சுப்பிரமணி (27). இவர் கன்னகப்பட்டில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு உள்பக்கம் பூட்டியே இருந்தது. இதையடுத்து அவரது வீிட்டிற்கு வந்த அவரது நண்பர் கதவை நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனல அதிர்ச்சி அடைந்த அவரது ந்ண்பர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது சுப்பிரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து அவரது உடலை ந்மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வீட்டை சோதனை செய்ததில் சுப்பிரமணி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில்,

எனது இந்த முடிவிற்கு என்னுடைய அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் என் உறவினர்கள், என் இனிய ஆருயீர் நண்பர்கள் அனைவரும் மன்னிக்கவும். என்னுடைய இந்த முடிவிற்கு காரணம் கலாம் ஐயா அவர்களின் இறப்பு என்னை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது. இந்தியாவை உலக நாடுகளுக்கு முன்னால் தலை நிமிர வைத்த அந்த அற்புத மாமனிதர் கலாம் ஐயா. ராமேசுவரம் கொடுத்த ரத்தினத்தை இழந்து விட்டோம். அவருடைய மறைவு இந்தியாவையே உலுக்கியது.

பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். எனவே யாருமே கலாம் ஐயாவுக்கு செய்யாத அஞ்சலியாக எனது உயிரை நானே மாய்த்துக் கொண்டு இந்த உயிர் அஞ்சலியே செலுத்துகிறேன். நிச்சயம் எனது அஞ்சலியை அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் ராமேசுவரம் மண்ணுக்கு செல்கிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil