ஏற்காடு பேருந்து விபத்து: ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை

Mahendran
புதன், 1 மே 2024 (10:00 IST)
ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில் ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் வெளியாகியுள்ளது.
 
மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாகவும், விபத்திற்கு பேருந்து வேகமாக சென்றதே காரணம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நிலையில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்டமாக பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. அடுத்தகட்டமாக  ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில்  6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments