Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேவலம்! கேவலம்!: ஸ்டாலினை கலாய்க்கும் சீமான் (வீடியோ இணைப்பு)

கேவலம்! கேவலம்!: ஸ்டாலினை கலாய்க்கும் சீமான் (வீடியோ இணைப்பு)
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (15:24 IST)
சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அம்மா அழைப்பு மையம் என்கிற புதிய இலவச தொலைப்பேசி அழைப்பு சேவையை தொடங்கி வைத்தார்.

இதனை திமுக பொருளாளர் ஸ்டாலின் விமர்சித்து, அதனால் பல்பு வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய ஒரு கூட்டத்தில், ஸ்டாலின் மேடையில் அம்மா அழைப்பு மைய சேவையை விமர்சிக்க போய், தான் அசிங்கப்பட்டதை விமர்சித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளாங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

செம கலாய்..

Posted by Meiyyanathan Addaikkalam on Friday, February 12, 2016
 
கூட்டத்தில் பேசிய சீமான், ஸ்டாலின் போல் செய்கை செய்து, அவரை போல் பேசி, நான் குளத்தூர் தொகுதியில் ஒரு தொலைப்பேசி சேவையை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன். அதற்கு போன் செய்கிறேன் என்று கூறி, ஹலோ, ராங் நம்பர், தயவு செய்து நம்பரை சரி பார்க்கவும் என சீமான் கூற மேடையில் இருந்தவர்கள் சிரிக்கின்றனர். கடைசியில் ஸ்டாலினின் இந்த செயலை கேவலம், கேவலம் என கூறும் ஒரு வீடியோ சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil