டாஸ்மாக் மதுவில் இருந்த தவளை.. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கூலி தொழிலாளி..!

Siva
புதன், 15 ஜனவரி 2025 (08:37 IST)
டாஸ்மாக் மதுவில் தவளை இருந்த நிலையில் அந்த மதுவை குடித்த கூலி தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 33 வயது கூலி தொழிலாளி வேல்முருகன், இவர் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அதை அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்து குடித்துள்ளார். அந்த பகுதியில் வெளிச்சம் அதிகம் இல்லாததால் மதுவில் தவளை இருந்ததை அவர் உணரவில்லை. இருப்பினும் பாட்டிலில் அடைப்பு இருந்ததை உணர்ந்த அவர், அதன் பிறகு டார்ச் லைட் அடித்து பார்த்தபோதுதான் அதில் தவளை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து டாஸ்மாக் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் அதை கூறிய போது, அதை பொருட்படுத்தாத ஊழியர்கள் அவரை திட்டி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தற்போது அந்த கூலி தொழிலாளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இறந்த தவளை இருந்த மதுவை குடித்ததால் கூலி தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தவெகவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ஆர்பி உதயகுமார்

உலகின் 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்களில் ஆய்வு: சென்னை மெட்ரோ முதலிடம்

இந்து அல்லாதோர் வீட்டிற்கு செல்லும் பெண்களின் கால்களை உடையுங்கள்: பாஜக பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..!

ரூ.18500 கோடி செலவில் கட்டப்பட்ட கூகுள் அலுவலகத்தில் மூட்டைப்பூச்சிகள் தொல்லை: ஊழியர்கள் அதிர்ச்சி..!

9ஆம் வகுப்பு மாணவரை பிவிசி குழாயால் அடித்து காயப்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்..தாய் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments