Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவோ செத்து தொலைந்து விட்டாள்: அமைச்சர் சரோஜாவா இப்படி பேசினார்?

ஜெயலலிதாவோ செத்து தொலைந்து விட்டாள்: அமைச்சர் சரோஜாவா இப்படி பேசினார்?

Webdunia
வியாழன், 11 மே 2017 (12:50 IST)
சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் அமைச்சர் சரோஜா குறித்து அளித்த பேட்டி அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேசிக்கும் அவரது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் சரோஜா. இவரது துறையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரியாக இருப்பவர் மீனாட்சி என்பவர். ஜெயலலிதாவால் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டவர் மீனாட்சி. இவரிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக அமைச்சர் சரோஜா பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
தர்மபுரியில் இருந்து சென்னைக்கு இடமாறுதல் கேட்ட மீனாட்சியை தனது வீட்டிற்கு நேரடியாக வரவழைத்த அமைச்சர் சரோஜா அவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது அமைச்சர் சரோஜா பேசியதாக மீனாட்சி கூறியது பின்வருமாறு.
 
உனது அப்பா ஜெயலலிதாவின் நண்பராக இருக்கலாம், அதெல்லாம் அந்தக்காலம். உனது ஜெயலலிதாவோ செத்து தொலைந்து விட்டாள். இன்னொருத்தி பெங்களூர் சிறைக்கு சென்றுவிட்டால். அடுத்தவன் திகாரில் இருக்கிறான்.
 
4 வருஷத்துல நான் 4000 கோடி சம்பாதிக்கும் வரை என் பணவெறி அடங்காது. உன்னால் 20 லட்சம் தர முடியாது என்றால் விட்டு விட்டு போய் விடு என்று மிரட்டியதாக மீனாட்சி கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா இருக்கும் வரை அவரை அம்மா, அம்மா என கூவி கூவி அழைத்து, அவர் முன் குனிந்த முதுகு நிமிராமல் அளவுக்கு அதிகமாக பணிவு கட்டி வந்த அமைச்சர் சரோஜாவா இப்படி பேசினார் என அரசியல் வட்டாரம் பரபரத்துக்கிடக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments