Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம்: பெண், போலீஸில் புகார்

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (17:50 IST)
மதுரையில், திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த்தாக வாலிபர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம், பேரையூர் சிட்டிலொட்டிபட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் டி.கல்லுப்பட்டியில் ஒரு  ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அபிஷேக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு சித்ரா, சென்னை சென்று வக்கீல் ஒருவருடன் உதவியாளராகச் சேர்ந்துள்ளார்.

அதன்பிறகு சித்ராவை பார்ப்பதற்காக அபிஷேக் அடிக்கடி சென்னை வந்துள்ளார். சித்ரா அங்கு தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் சித்ராவை பார்ப்பதற்காக அடிக்கடி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமாகிய சித்ரா, அதனை அபிஷேக்கிடம் கூறியுள்ளார். அபிஷேக் கர்ப்பத்தை கலைக்கச் சொன்னதால் சித்ராவும் கலைத்துள்ளார்.

மேலும் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என சித்ரா கேட்டதற்கு, திருமணம் செய்து கொள்ள முடியாது என அபிஷேக் மறுத்துள்ளார்.

அதன்பின்பு அபிஷெக்கின் வீட்டிற்கே சென்று, அவரின் பெற்றோரிடம் சித்ரா, நடந்ததை கூறியுள்ளார்.

விஷயத்தை கேட்டறிந்த அபிஷேக்கின் பெற்றோர்கள், சித்ராவை, விஷயத்தை அப்படியே விட்டுவிட வேண்டும் என்றும், இதையும் மீறி அபிஷேக்கை திருமணம் செய்துகொள்ள எண்ணினால், சித்ராவை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனை அடுத்து சித்ரா மதுரை பேரையூர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை குறித்து பேரையூர் போலீஸார் அபிஷேக் மற்றும் அவரது பெற்றோர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்