சவுக்கு சங்கர் மீது பெண் சப் இன்ஸ்பெக்டர் புகார். மீண்டும் ஒரு வழக்கு பதிவு..!

Siva
செவ்வாய், 7 மே 2024 (18:15 IST)
பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்தது. 
 
அதுமட்டுமின்றி சவுக்கு சங்கர் காரில் கஞ்சா இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அது குறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இப்போதைக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சவுக்கு சங்கர் மீது பெண் சப் இன்ஸ்பெக்டர் கீதா என்பவர் புகார் அளித்துள்ளதாகவும் இதனை அடுத்து ஆபாசமாக பேசுதல் உள்பட நான்கு பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
சவுக்கு சங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: கோவை மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா.. பெயர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments