Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நைட்டிக்கு விலை 60,000 ரூபாயா? ஆன்லைனில் ஏமாந்த பெண்!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (07:23 IST)
ஆன்லைன் மூலமாக நைட்டி வாங்கிய பெண்ணுக்கு 60,000 ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவது அதிகமாகியுள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்தி நிறைய மோசடிகளும் நடந்துவருகின்றன. சென்னை கொரட்டூரைச் சேர்ந்த 32 வயதான செல்வராணி கிளப் பேக்டரி என்ற செயலியின் மூலம் 550 ரூபாய் மதிப்புக்கு நைட்டி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் நைட்டி குறிப்பிட்ட நேரத்தில் வராததால் ஆர்டரைக் கேன்சல் செய்து, பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

ஆனால் கஸ்டமர் கேரில் பேசியவர் வங்கிக் கணக்கை கேட்டுள்ளார். மேலும் டீம் வியூவர் என்ற செயலியை டவுன்லோட் செய்ய சொல்லி, அதில் ஏடிஎம் கார்டின் முன் மற்றும் பின் பக்கங்களை போட்டோ எடுத்து அனுப்ப சொல்லியுள்ளார். அவ்வாறு செல்வராணி செய்யவே, பின்னர் வந்த ஓடிபி நம்பரை சொல்ல சொல்லியுள்ளார். அதையும் செல்வராணி சொல்லவே, அந்த வங்கிக் கணக்கில் இருந்து 60,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி, தற்போது போலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலிஸார் சம்மந்தப்பட்ட கஸ்டமர் கேர் எண்ணை வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவடி - சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புதிய மின்சார ரயில்.. தேதி அறிவிப்பு..!

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ.. விழிப்புணர்வு தேவை என கூறும் மருத்துவர்கள்..!

US Presidential Election: வெற்றியை தீர்மானிக்க போகும் 7 மாகாணங்கள்! ட்ரம்ப் செய்த ட்ரிக் வேலை செய்யுமா?

திமுக குடும்ப ஆட்சியை எம்ஜிஆர் அகற்றியதை போல.. விஜய்யும் அகற்றுவார்! - தவெக செய்தி தொடர்பாளர்!

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments