Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனுடன் உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய்: தலைமறைவாகிய கள்ளக்காதல் ஜோடி!

மாணவனுடன் உல்லாசமாக இருந்த 2 குழந்தைகளின் தாய்: தலைமறைவாகிய கள்ளக்காதல் ஜோடி!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (16:35 IST)
நெல்லை மாவட்டம் பேட்டை செந்தமிழ் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் ஒருவன் 25 வயதான இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவருடன் உல்லாசமாக இருந்து அவருடன் ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.சிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் அந்த மாணவன். கடந்த திங்கட் கிழமையன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
இதனால் பதட்டமடைந்த மாணவரின் பெற்றோர் நெல்லை பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், பேட்டை, எம்.ஜி.டி நகரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணுடன் அவர் சென்றுவிட்டார் என்பது தெரிய வந்தது.
 
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 பேருடன் திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொருவரிடம் சில ஆண்டுகள் மட்டுமே குடும்பம் நடத்தும் அவர், அவ்வப்போது கணவரை மாற்றி வந்தார். அவருக்கு 2 குழந்தைகளும் இருக்கிறது. 
 
இந்நிலையில் அந்த பெண், கல்லூரி மாணவரை தன்னுடைய வலையில் சிக்க வைத்துள்ளார். கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
 
இதனையடுத்து தற்போது அந்த மாணவனை இழுத்துக் கொண்டு அந்த பெண் தலைமறைவாகி விட்டார். அவரின் 2 குழந்தைகளையும் அவருடனேயே அழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி தங்கள் இருப்பிடத்தை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பதால் அவர்களை பிடிக்க போலீசார் போராடி வருகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments