இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் படுகொலை - போலீஸ் புலன் விசாரணை தீவிரம்
இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் படுகொலை - போலீஸ் புலன் விசாரணை தீவிரம்
சென்னையில், சென்னையில் பிரபல ஐடி நிறுவன பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை இன்போசிஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர் மர்ம நபர்களால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலை நடைபெற்ற நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் தடங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால், குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர புலன் விசாரணையில் உள்ளனர்.