உன்ன விட மாட்டேன்டா.. ஆவியா வருவேன்! – தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கடிதம்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (08:34 IST)
தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என கடிதம் எழுதிவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான பெண் ஒருவர். இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் கணவனை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை ராஜேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் வீட்டில் ஆராய்ந்தபோது பெண் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அந்த பெண் தான் இறந்து ஆவியாக வந்து ராஜேந்திரனையும், அவர் குடும்பத்தையும் பலி வாங்குவதாக எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ராஜேந்திரனை கைது செய்துள்ள போலீஸார் அந்த கடிதம் இறந்த பெண் எழுதியதுதானா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அடுத்த கட்டுரையில்