செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணை.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

Senthil Velan
புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:25 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  
 
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவை தொடங்கியது.

குற்றச்சாட்டு பதிவின் போது, தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்ததார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சாட்சி விசாரணை துவங்கியதாக அமலாக்கத்துறை வாதிட்டது.

ALSO READ: நடிகை மிமி சக்ரவர்த்திக்கு பாலியல் மிரட்டல்.! மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.!!

செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்