Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ விடுதலையை இழிவு செய்து படம் எடுப்பதா? ஒற்றை பனைமரத்தை தடை செய்ய வேண்டும்! - சீமான் கண்டனம்!

Prasanth Karthick
வியாழன், 24 அக்டோபர் 2024 (10:34 IST)

இலங்கை ஈழ விடுதலை போர் குறித்து தயாராகியுள்ள ‘ஒற்றை பனைமரம்’ படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கையில் நடந்த ஈழ போராட்டம் குறித்த படமாக தயாராகியுள்ளது ‘ஒற்றை பனைமரம்’. ஈழத்தில் விடுதலை புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த போரை களமாக கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தில், விடுதலை புலிகள் அமைப்பினர் அங்குள்ள மக்களை துன்புறுத்தியதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

 

பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிட்டபோதே பல விமர்சனங்களை எதிர்கொண்ட இந்த படம் நாளை தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
 

ALSO READ: 2 ஆண்டுகளில் 1 கோடி மக்கள் தொகை குறைவு! முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடு?
 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “ஈழத்தாயக விடுதலை போராட்டத்தை இழிவுப்படுத்தும் ஒற்றை பனைமரம் திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிடப்பட அனுமதிக்கக் கூடாது. தாய் மண்ணின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரையும் இழந்த மாவீரர்களின் ஈகத்தை கொச்சைப்படுத்தும் பொய் பரப்புரைகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments