Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலை கட்சியில் சேர்ப்பீர்களா..? ஸ்டாலின் மழுப்பல் பதில்

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (15:29 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, 
 
திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என விமர்சிக்கப்படுகிறதே என கேட்ட போது, பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி எடுப்பதாக எங்களுக்கு செய்தி வருகிறது. 
 
அது கொள்கைக் கூட்டணியா? அல்லது கொள்ளைக் கூட்டணியா? என்பதுதான் என்னுடைய கேள்வி. இன்னும் சொல்லப்போனால் இதே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சேர்த்துவைக்க முயற்சித்தவர், கையைக் குலுக்கி அவர்களை சேர்த்து வைத்தவர் மோடி. 
 
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறித்ததை, திமுக உணர்வாக நான் வெளிப்படுத்தியுள்ளேன். நான் வெளிப்படுத்திய உணர்வை யாரும் எதிர்க்கவில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பின்னால் அறிவித்திருக்கலாம் என்ற கருத்தே நிலவுகிறது. 
 
திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது, ஆனால் காங்கிரஸுடன் கூட்டணி குறித்து பேசுவோம் என கமல் கூறுகிறார், காங்கிரஸுடன் கமல் இணைவதை திமுக ஏற்றுக்கொள்ளுமா என்ற இதுபோன்ற யூகங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என பதிலளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments