Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணி மனைவிக்கு எம்.பி.,சீட்! பாமகவின் மெகா பிளான்

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (22:19 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேசும்போது மக்களவை தொகுதியோடு மாநிலங்களவை தொகுதி கேட்கும் நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது பாமக தான். அந்த வகையில் வரும் தேர்தலிலும் அதிமுகவிடம் 5 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்க பாமக தலைமை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

அந்த ஒரு மாநிலங்களவை தொகுதியின் மூலம் அன்புமணி மனைவி செளம்யாவை எம்பி ஆக்க பாமக தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை அதிமுக தரப்பிடம் நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

என்னால் மாதம் ரூ.200 கோடி சம்பாதிக்க முடியும்: குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த நிதின் கட்காரி..!

ஒரே முகவரியில் 79 வாக்காளர்கள்; பீகார் போலவே தமிழகத்திலும் குளறுபடியா?

விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களை சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்து சொன்னார்கள்: விஜய் அறிக்கை

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.. பெரம்பலூர் மக்களுக்கு விஜய் கொடுத்த உறுதிமொழி..!

அடுத்த கட்டுரையில்
Show comments