Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 பேரை காலால் மிதித்தே கொன்ற காட்டு யானை: மக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (13:27 IST)
கோவையில் 2 பேரை காட்டு யானை ஒன்று தும்பிக்கையால் அடித்தும் காலால் மிதித்தும் கொன்ற செய்தி பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

கோவை பன்னிமடை சஞ்சீவ் நகரை சேர்ந்த டிரைவர் கணேசன், என்பவரை ஒரு காட்டுயானை அடித்து கொன்றது. இதையடுத்து நேற்று இரவு தொப்பம்பட்டி என்னும் பகுதியில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கல்லூரி வழியாக இறங்கியுள்ளது காட்டு யானை. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்திக் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை நோக்கி காட்டு யானை ஓடி வந்தது. இதை பார்த்த இருவரும் ஓட்டம் பிடித்தனர்.

ஆவேசமாக துரத்தி வந்த யானை, பிரேம் கார்த்திக்கை துதிக்கையால் சுழற்றி காலில் போட்டு மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிராம் உயிரிழந்தார். விக்னேஷ் தப்பித்து ஓடிவிட்டார்.

இரண்டு நாட்களில் இரண்டு பேரை யானை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments