’சசிகலாவை ஏன் ஆதரித்தேன்?’ - அவைத்தலைவர் மதுசூதனன் விளக்கம்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (02:03 IST)
சசிகலா கட்சியை வழிநடத்துவார் என அவரை தேர்வு செய்தேன். ஆனால் தற்போது அவரது குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று அவைத் தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.


 

கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நோய்வாய்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோது, பொதுச்செயலராக மதுசூதனனை நியமிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், திவாகரன் தன்னிடம் வந்து சசிகலாவை பொதுச்செயலராக ஆக்க வேண்டும் வலியுறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ள மதுசூதனன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில், “சசிகலா கட்சியை வழிநடத்துவார் என அவரை தேர்வு செய்தேன். ஆனால் தற்போது அவரது குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதலமைச்சருக்கே இந்தநிலை என்றால், அவைத்தலைவரான எனக்கு என்ன வேண்டுமானாலும் நேரலாம். அதிமுகவை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலமைச்சருக்கு ஆதரவு அளித்தேன். கண்டிப்பாக நீதி வெல்லும், நல்லதே நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப்பிரச்சினை அல்ல, அதிகார வர்க்கத்தின் 'ஈகோ' பிரச்சினை: தமிழிசை

20 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்வாதாரம்: ஒரே இரவில் அழித்துவிட்டது மோடி அரசு: ராகுல் காந்தி

டெலிவரி செயலிகளில் இருந்து வெளியேற முடிவு செய்யும் உணவகங்கள்: என்ன காரணம்?

புர்கா அணியாத மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்.. 2 மகள்களும் கொலை..!

சவுதியில் பிச்சையெடுத்த 24000 பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்.. நாடு கடத்தப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments