அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பெறுப்பேற்றுகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அம்மா வழியில் இம்மி அளவும் பிசகாமல் நடப்போம் என்றார். இந்த சூழ்நிலையில் அவர் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தொண்டர்கள் பலர் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தனது கோரிக்கையை பதிவு செய்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும். என்னை போன்ற தொண்டர்களின் கோரிக்கையை அவர் ஏற்கவேண்டும். கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என்று கூறினர்.
வர்தா புயல் பாதிப்பில் முதல்வர் பன்னீர் செல்வம் பணி பாராட்டும் வகையிலேயே அமைந்திருந்தது. சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணமே இருந்தன. அப்படியிருக்க எதற்காக முதல்வர் பதவியை சசிகலாவிடம் ஒப்படைக்க தம்பிதுரை கூறினார் என பலரும் கேள்வி எழுப்பினர். பன்னீருக்கும் தம்பிதுரைக்கும் என்ன பிரச்சனைகள் என பலர் கேள்விகள் எழுந்த நிலையில், இதுதான் பிரச்சனை என சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
அதில், ஜெயலலிதா மரணத்தை அடுத்து முதல்வர் பதவி யாருக்கு என கேள்வி எழுந்தபோது பன்னீர் செல்வம் பெயரும், அடுத்த இடத்தில் தம்பிதுரை பெயரும் இருந்தன. எப்படியும் தனக்கே முதல்வர் பதவி தனக்கே கிடைக்கும் என்று எண்ணிய நிலையில், மத்திய அரசின் ஆதரவுடன் பன்னீர் செல்வம் முதலவர் ஆனார். இதனால் தம்பிதுரை விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
வர்தா புயல் பாதிப்பு தொடர்பாக தில்லியில் பிரதமரை சந்தித்தார் முதல்வர் பன்னீர் செல்வம். அப்போது உடன் தம்பிதுரையும் சென்றார். ஆனால் பிரதமருடன் பன்னீர் செல்வம் பேசும்போது, தம்பிதுரையை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தற்போது அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் சசிகலாவை முதல்வராக பதவியேற்குமாறு அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக்கிகொண்ட தம்பிதுரை சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று பகிரங்க கோரிக்கை விடுத்துவருகிறார்.இதன்மூலம் பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயிக்கபோவது பன்னீர் செல்வமா? தம்பிதுரையா? என்று.